நான் அறிந்தவை - 1

சமீபத்தில் ஆங்கில படம் காசப்லன்க (“Casablanca”) பார்த்தேன். 1943இல் வெளிவந்த இந்த படம், மைக்கல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்ட உலக பிரசிதிபெட்ற ஒரு படம். இது பரபரப்பு மிக்க ஒரு காதல் கதை. காதல் கதை என்றாலும் கதை களம், மிகவும் பரபரப்புமிக்க ஜேர்மனிய நாசி படையினரால் இன்னும் ஆகரமிக்கபடாத ஒரு பிரெஞ்ச் கோலோனி இடம் தான் காசப்லன்க. அங்கே இரவு கேளிக்கை விடுதி நடத்தும் “ரிக்(Rick)” என்பவருக்கும் “ல்ல்ச(llsa)” என்டர் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடக்கும் ஒரு கதைதான் இது. இந்த காசப்லன்க என்ற ஊருக்கு வருபவர்கள் எல்லாம் ஜேர்மனிய படைகளின் அட்டுழியும் தாங்க முடியாமல் , அமெரிக்காவுக்கு தப்பித்து செல்லும் மக்கள் ஆவர்கள். அமெரிககவுக்கு விசா வாங்கி செல்லுவதற்கு அந்த ஊர் தான் இருக்கிற ஒரே நம்பிக்கை. அங்கு வருகிற ல்ல்ச மற்றும் அவளுடிய கணவன், தன்னுடிய காதலன் ரிக்கின் உதவியுடோன் எப்படி செல்லுகிறார்கள் என்பதுதான் படம். கதை போர், காதல், துரோகம், சூழ்நிலையின் கைதி என ஒரு கலவையான ஒரு படம்.

அந்த ஊருக்கு வருவது அதனை எளிதல்ல என்பதை அந்த படத்தின் முதல் மூன்று நிமிடங்கள் புரிய வைத்துவிடும். பின்னர் அங்கே வாழ்வதும், அங்கு இருந்து தப்பித்து அமெரிக்க செல்வதும் எவ்வோளவு கடினமான ஒரு வேலை என்பது அந்த படம் புரிய வைத்து விடும். போர் காலத்தில், நாடோடியாக வந்த மக்கள் எப்படி கஷ்டபடுவர்கள், அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை இந்த படம் பிரதிபலிகிறது. 1997இல் “லாஸ் ஏஞ்செலஸ் டெய்லி” என்கிற ஒரு பத்திரிகை நடத்திய கருது கணிப்பில் முதல் இடத்தை பெற்றது இந்தப்படம். அதன் பின்னர், சினிமா வரலாற்றின் ஒரு மிக முக்கியமான படமாக மாறியது<>.

ஸ்பெயின் திரும்புவம் தான் கால்பந்தாட்டத்தில் ஒரு கில்லாடி என்று உலகிற்திற்கு நிரூபிதிருகிறது. 2008 ஐரோ கோப்பை, 2010 உலக கோப்பை, திரும்பவும் 2012 ஐரோ கோப்பை என வரிசையாக ஜெயித்து தன்னை கால்பதடத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக்கி காட்டிகிறது. நவீன கால்பந்து 19ஆவது நூற்றாண்டில் இங்கிலாந்தில் தான் முதலில் ஆடப்பட்டது. முதலில் கிராமத்தில் ஆடப்பட்ட இந்த விளையாட்டு பின்னர் முறை படுத்தி இப்போது உலகம் முழுவது ஆட்பட்டு வருகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்தான் தொடங்கப்பட்டது என்றாலும் இதனுடைய வரலாறு மிகம பழமையானது ஆகும். அதாவது நாம எப்போது காலால் எட்டி ஓதடித்து பலர் சந்தோஷபட்டர்ர்களோ அப்போதே இது தொடங்கி இருக்கவேண்டும். இது பிரிட்டிஷ் இராணுவ வீரர்களால் நம் இந்தியாவிற்கு அறிமுகபடுத்தபட்டது.

சோக்கேர் (Soccer) எனவும் இதனை அழைப்பார்கள். ‘Association Football’ என்ன்பதின் சுருக்கம் தான் சோக்கேர். யார் இந்த ‘Association’? பிபா (FIFA) என்ற ஒரு அமைப்புதான் அது, அதுதான் இந்த கால்பந்து ஆட்டத்தை கட்டுபடுத்துகிறது. நம்ம ஊரில் கிரிக்கெட்டுக்கு ஒரு பிசிசிஐ (BCCI ) போல. கிரிகெட் கூட ஆங்கிலேயர்கள் அறிமுகபடுத்தியது தான் என்பது பச்சை குழந்தைகுகூட தெரியும். நம்மளும் கிரிக்கெட்ல கொடிகட்டி பறகோரம், நம்ம வீரர்களும் தொடர்ந்து உலககோப்பையை கைபற்றுவதற்கு வாழ்த்துகள்.